44 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயல்கிறதா ஈஷா?



கோவையை அடுத்த முட்டத்துவயல் என்ற  பகுதியில் முத்துசாமி என்பவருக்கு சொந்தமாக 44.30 ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடம் நில உச்சவரம்பு சட்டத்தின்படி உபரி நிலமாக அறிவிக்கப்பட்டு கடந்த 1992ம் ஆண்டு பழங்குடி இன மக்கள் 46 பேருக்கு ஒப்படைக்கபட்டது. ஆனால், போலியான ஆவணங்களை தயாரித்த ஈஷா யோக மையம் அந்த நிலத்தை அபகரித்ததாக கூறப்படுகிறது. 

இந்த நிலையில், ஈஷா அபகரித்ததாக கூறப்படும் 44.30 ஏக்கர் நிலத்தை மீட்டு தலித் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வழங்கக்கோரி பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தொடர்ந்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அந்த இடத்தை 15 நாட்களுக்குள் மக்களுக்கு வழங்குவதாக உறுதியளித்தனர். மேலும், அந்த இடத்தை சுற்றிலும் கம்பி வேலி அமைத்தனர். அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.



இந்த நிலையில், இன்று ஈஷா நிர்வாகத்தினர் இன்று 4 டிரேக்டர்களை கொண்டு அந்த நிலத்தை உழவு செய்தனர்.பேச்சுவார்த்தையில் இருக்கும் இடத்தை ஈஷா நிர்வாகம் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்ய முயல்வது கண்டனுத்துக்கு உரியது என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.மேலும், இந்த பிரச்சனையில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தீர்வுகான வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...