பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பாதை பணிகள் குறித்து தென்னக ரயில்வேத் துறை பொது மேலாளர் ஆய்வு

பொள்ளாச்சி - போத்தனூர் அகல ரயில்வே பணிகள் குறித்து தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பொள்ளாச்சி மற்றும் போத்தனூர் ரயில்வே பாதை அகல பாதையாக மாற்றும் பணி கடந்த 2010-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த பணிகள் சுமார் ரூ.600 கோடி மதிப்பில் தொடங்கப்பட்டது. இதில் பொள்ளாச்சி - திண்டுக்கல், பொள்ளாச்சி - பாலக்காடு இடையேயான அகல ரயில் பாதை பணிகள் முடிவடைந்து ரயில் போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

மேலும், 2010-ஆம் ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதி போதுமானதாக இல்லாததால் பொள்ளாச்சி- போத்தனூர் இடையேயான ரயில்வே பணிகள் மிகவும் மந்தமான நிலையில் நடைபெற்று வந்தது. இதைத் தொடர்ந்து கூடுதலாக ரூ.100 கோடியினை மத்திய அரசு ஒதுக்கியது. இதையடுத்து தற்போது பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. 



இந்நிலையில், பொள்ளாச்சி போத்தனூர் இடையேயான அகல ரயில் பாதையில் தென்னக ரயில்வே மேலாளர் வசிஸ்ட்ட ஜோகிரி நேரில் சென்று ஆய்வு செய்தார். பின் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''பொள்ளாச்சி- போத்தனூர் இடையிலான ரயில்வேப் பாதைப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துவிடும். ஜனவரி இறுதிக்குள் பணிகள் முடிவடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.



Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...