6 நாள் சுற்றுப்பயணமாக மும்பை வந்தடைந்தார் இஸ்ரேல் ஜனாதிபதி ரிவ்லின்

இந்தியா-இஸ்ரேல் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இஸ்ரேல் ஜனாதிபதி ரியூவென் ரிவிலின் 6 நாட்கள் சுற்றுப்பயணமாக இன்று மும்பை வந்து சேர்ந்தார்.

இன்று காலை அரசு உயர் அதிகாரிகள், தொழில் அதிபர்கள், மற்றும் கல்வியாளர்களுடன் மும்பை விமானநிலையம் வந்து சேர்ந்த ரிவ்லின், டெல்லிக்கு புறப்பட்டு செல்கிறார். டெல்லி சென்றடைந்ததும். பிரதமர் மோடி வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், ஆகியோரை சந்தித்து பேசும் ரிவ்லின், இரு நாட்டு கூட்டு திட்டங்கள் மற்றும் ஒத்துழைப்புடன் செயல்பட்டு வரும் திட்டங்களை பார்வையிட உள்ளார்.

சண்டிகாரில் நடைபெறும் அக்ரோ-டெக் மாநாட்டில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியுடன் இணைந்து ரிவ்லின் கலந்து கொள்கிறார். கடந்த 2008 ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் நினைவிடத்துக்கு செல்கிறார். பின்னர் மகாத்மா காந்தியிடன் நினைவிடம் செல்லும் ரிவ்லின் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

ரிவ்லின் இந்தியா புறப்படுவதற்கு முன் வெளியிட்ட அறிக்கையில், “ இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் நட்பு நாடான இந்தியாவுக்கு பயணம் செய்ய உள்ளதாகவும், இருநாடுகளுக்கும் இடையே பழங்கால பாரம்பரியம் உள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான நட்பு மேலும் நெருக்கமாக வளரும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...