கோஹினூர் வைரத்தை மீட்க மத்திய அரசுக்கு நோட்டீஸ்

புதுடில்லி: பிரிட்டனில் உள்ள கோஹினூர் வைரத்தை மீட்பது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

பரிசா

இந்தியாவிற்கு சொந்தமான கோஹினூர் வைரம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் திருடப்பட்டு, தற்போது பிரிட்டன் வசம் உள்ளது. இதனை மீட்க நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இவ்வழக்கில் ஏற்கனவே ஆஜராகி பதிலளித்த மத்திய அரசு, கோஹினூர் வைரம் திருடப்படவில்லை. 1849 ம் ஆண்டு, சீக்கிய போரில் உதவியதற்காக மகாராஜா ரஞ்சித் சிங்கால் கிழக்கிந்திய கம்பெனிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது. அதனை பலவந்தமாக கேட்க முடியாது என பதிலளித்திருந்தது.

அரசின் இந்த பதிலை ஏற்க மறுத்து, தொடர்ந்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இவ்வழக்கை இன்று மீண்டும் விசாரித்த சுப்ரீம் கோர்ட், கோஹினூர் வைரத்தை மீட்க இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் பதிலளி்க்க வேண்டும் என மத்திய அரசிற்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...