கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தை கடத்தல்


கோவை அரசு மருத்துவமனையில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையை 5 பேர் கொண்ட கும்பல் கடத்தி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சிங்கநல்லூர் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி ராஜன், ஜோதி தம்பதிகளுக்கு கடந்த 8 ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் அழகான பெண் குழந்தை பிறந்தது. இதையடுத்து ஜோதி அரசு மருத்துவமனையில் உள்ள பிரசவத்திற்கு பிந்தைய வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருடன் ஈரோடு பகுதியை சேர்ந்தவர் எனக்கூறி அர்ச்சனா என்பவரும் வார்டில் இருந்து வந்துள்ளார். தனது குழந்தை ஐசியூ வார்டில் இருப்பதாக அர்ச்சனா கூறி வந்ததாக தெரிகிறது. இந்நிலையில் இன்று மதியம் 1 மணியளவில் மருத்துவரை பார்க்க சென்ற ஜோதி தனது குழந்தையை பார்த்துக்கொள்ளுமாறு அருகில் இருந்த அர்ச்சனாவிடம் கூறிச்சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது அர்ச்சனாவும் குழந்தையும் மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜோதி இது தொடர்பாக மருத்துவமனை அதிகாரிகள் மூலம் காவல்துறையில் புகார் அளித்தார்.

இதையடுத்து காவல்துறையினர் சிசிடிவி பதிவுகளை கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். 3 பெண்கள் உட்பட 5 பேர் வாடகை கார் ஒன்றில் குழந்தையுடன் கிளம்பி செல்லும் காட்சிகள் பதிவாகியிருப்பதால் குழந்தையுடன் மாயமானவர்களை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...