சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு



கோவை மாவட்டம், நீலிக்கோணாம்பாளையத்தை அடுத்த அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன். இவரது மனைவி ஜெயநாயகி (67). புதனன்று இரவு 9 மணியளவில் இவர் தனது வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர், ஜெயநாயகி கழுத்தில் அணிந்திருந்த 5.5 பவுன் தங்கச் சங்கிலியை பறித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த ஜெயநாயகி கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் அப்பகுதியில் திரண்டனர். அதற்குள், அந்த மர்ம நபர் இரு சக்கர வாகனத்தில் மின்னல் வேகத்தில் சென்று மறைந்தார். இதுகுறித்து, ஜெயநாயகி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சிங்காநல்லூர் காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து செயின் பறிப்பில் ஈடுபட்ட மர்ம நபரைத் தேடி வருகின்றனர்.

அதேப்போல், கடந்த திங்கள்கிழமை டாடாபாத் பகுதியைச் சேர்ந்த பெண் மருத்துவர் ஒருவரிடம் 7 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். மேலும், கோவையில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் சாலையில் நடந்து சென்ற 8 பேரிடம் மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...