பொது சிவில் சட்டத்தை எதிர்த்து நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்


தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாவட்ட தலைவர் உபைதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் மாநில தலைவர் சர்மிளா பேசுகையில்; இந்திய அரசியலமைப்பின் சட்டத்தின் 25ம் பிரிவு இந்தியாவில் வாழும் அனைத்து மக்களுக்கும் தங்கள் விரும்பிய மதத்தை பின்பற்றவும், நடைமுறைபடுத்தவும், பரப்பவும் உரிமை அளித்துள்ளது. இந்நிலையில், தற்போது ஆட்சி செய்யக்கூடிய மத்திய அரசு முஸ்லீம்கள் பின்பற்றும் ஷரீஅத் சட்டத்தை பின்பற்றுவதை தடுத்து பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது. இந்த முயற்சி முஸ்லீம் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு எதிரான போர் என அவர் தெரிவித்தார். 

இதில், நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு உறுப்பினர் நஷீமா, விமன்ஸ் இந்தியா மூவ்மெண்ட் மாநில பொதுச் செயலாளர் பர்ஜானா மற்றும் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...