பறவை காய்ச்சல் பரவலை தடுப்பது தொடர்பாக ஆட்சியர், கால்நடைதுறை, சுகாதார துறை அதிகாரிகள் ஆலோசனை


கேரளாவில் பறவை காய்ச்சல் பரவிவரும் நிலையில் கோவையில் பறவை காய்ச்சல் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தேவையான நோய் தடுப்பு மருந்துகள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோயானது வேகமாக பரவி வருகின்றது.இந்நிலையில் தமிழகத்தில் பறவை காய்ச்சலானது பரவி விடாமல் இருக்க நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.குறிப்பாக தமிழக கேரள எல்லையோரம் இருக்கும் மாவட்டங்கள் அனைத்தும் உஷார் படுத்தப்பட்டு கேரளாவில் இருந்து தமிழகம் வரும் வாகனங்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளித்த பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன.இந்நிலையில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துவது தொடர்பாக இன்று மாலை முகாம் அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆட்சியர் ஹரிகரன் ஆலோசனை நடத்தினார்.இந்த ஆலோசனை கூட்டத்தில் கால்நடைபராமரிப்பு துறை, சுகாதார துறை, வருவாய் துறை அதிகாரிகள் ஆகியோருடன் கோழி பண்ணை உரிமையாளர்களும் கலந்து கொண்டனர்.இந்த ஆலோசனை கூட்டத்தின் போது கேரளாவில் இருந்து வாத்து, முட்டை, கோழி தீவனங்கள் போன்றவை ஏற்றி வரும் வாகனங்களை எக்காரணம் கொண்டும் அனுமதிக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.மேலும் கோவை மாவட்டத்தில் இருந்து கேரளா செல்லும் 12 வழித்தடங்களிலும் அமைக்கப்பட்டுள்ள் 36 குழுக்கள் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மறு உத்திரவு வரும் வரை தொடந்து ஈடுபடவும் ஆட்சியர் ஹரிகரன் அதிகாரிகளுக்கு அறிவுத்தினார்.மேலும் நோய் கிளர்ச்சி ஏற்பட்டால் அதை உடனடியாக கட்டுப்படுத்தும் பொருட்டு தேவையான மருத்துவ உபகரணங்களை தயார் நிலையில் வைத்திருக்க உத்திரவிட்ட ஆட்சியர், நோய் தடுப்பிற்காக பயிற்சி அளிக்கப்பட்ட 40 அதிரடி குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் ஆட்சியர் ஹரிகரன் தெரிவித்தார்.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...