முன்னோர்களுக்கு மரியாதை செலுத்தும் கல்லறை திருநாள்.!



உலகில் உள்ள மதங்கள் அனைத்திலும் நம்மை நெறிப்படுத்திய முன்னோர்களை வணங்கி, மரியாதை செய்யும் விதமாக திருவிழாக்கள் மற்றும் சடங்குகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இந்து மதத்தில் ஆடி மாதத்தில் முன்னோர்களுக்கு புத்தாடை, படையல் வைத்து, அவர்களை வணங்குவது வழக்கம். இஸ்லாத்தில் ஒவ்வொரு பண்டிகை தினத்தின் போதும் பள்ளிவாசல்களில் உள்ள முன்னோர்கள் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்துவது வழக்கம். அதன்படி கிறிஸ்தவர்கள் தங்கள் மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியே கல்லறை திருநாள் நிகழ்ச்சி.



ஆண்டுதோறும் நவம்பர் மாதம் 2ம் நாள் கல்லறைத் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் கிருத்தவ மக்கள் அனைவரும், மறைந்த தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்களின் நினைவிடத்திற்கு சென்று அதை சுத்தப்படுத்தி, வர்ணம் பூசுவர். தொடர்ந்து, அந்த கல்லறைகளுக்கு மாலையிட்டு, வணங்கி தங்களது மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவர்.அதன் படி உலகம் முழுவதும் இன்று கிருத்தவ மக்கள் இந்து கல்லறைத் திருநாளை அனுசரிகின்றனர்.



கோவையில், புலியகுளம், சவுரிபாளையம், சுங்கம், போத்தனூர், கருமத்தம்பட்டி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கல்லறைகளில் கிருத்துவர்கள் இன்று கல்லறை திருநாளை கடைபிடித்து வருகின்றனர். இதற்காக அனைத்து கல்லறைகளும் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதலே இந்த பகுதிகளில் கூட்டம் அதிகரித்துள்ளது. தொடர்ந்து மாலை 6 மணிவரை இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பிற்பகலில் கல்லறைகளில் திருப்பலி நடைபெற உள்ளது. ஆலையத்தில் உள்ள தலைவர்கள் மற்றும் கோவை மாவட்ட ஆயர் தாமஸ் அக்வினாஸ் இந்த திருப்பலியை தொடங்கி வைக்கின்றனர். இதில் குடும்பத்தோடு கலந்து கொள்ளும் கிறித்தவ மக்கள், தங்கள் முன்னோர்கள் ஆத்தம சாந்தி அடைய வேண்டி ஜெபத்தில் இடுபடுவர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...