மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இன்று இடிப்பு: 10 விநாடிகளில் தரைமட்டமாக்க ஏற்பாடு

சென்னை: பாதுகாப்பற்றது என்று அறிவிக்கப்பட்ட சென்னை மவுலிவாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இன்று திட்டமிட்டபடி இடிக்கப்பட இருக்கிறது. வெடி மருந்துகளை பயன்படுத்தி கட்டிடத்தின் இடிபாடுகள், கட்டிட சுற்றுவட்டாரத்திற்குள்ளேயே விழும் வகையில் இடிக்கப்படுகிறது. பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் 11 மாடி கட்டிடம் இடிக்கும் பணி இன்று திட்டமிட்டப்படி நடக்கும் என்று நேற்று கட்டிடத்தை இடிக்கும் நிர்வாக இயக்குநர் பொன்னுலிங்கம் தெரிவித்திருந்தார். அதன்படி இன்று காலை 8 மணி அளவில் அந்த கட்டிடத்தை இடிப்பதற்கான தேவையான வெடி மருந்துகளை பொருத்தும் பணி தொடங்கும் என்று தெரிவித்திருந்தார். சுமார் 8 மணிக்கு தொடங்கும் பணி மதியம் 2, 3 மணிக்கு நிறைவடைந்துவிடும் என்றும், அந்த பணி நிறைவடைந்ததும் 10 விநாடிகளில் கட்டிடம் தரைமட்டம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த கட்டிடத்தை இடிக்கும் பணிக்கு மழை போன்ற இயற்கை பேரிடர்கள் எந்த விதத்திலும் தடங்களாக இருக்காது. மின்னல், இடி போன்றவை வந்தால் மட்டுமே, இக்கட்டிடத்தை இடிக்கும் பணி தள்ளிப்போகுமே தவிர, மற்ற எந்த வகையிலும் இந்த கட்டிடம் இடிப்பு பணி தள்ளிப்போகாது என்றும் தெரிவித்திருந்தார்கள். இதனையடுத்து தற்போது இதற்கான முழு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அந்த கட்டிடத்தை சுற்றி 100 மீட்டர் பரப்பளவுக்குள் யாரும் இருக்கக்கூடாது என்று நேற்றே தெரிவித்துவிட்டது. அதன்படி கட்டிடத்தை சுற்றியுள்ள சுமார் 120 வீடுகளில் வசிப்பவர்கள் யாரும் இருக்க வேண்டாம்.

அருகில் மதநந்தபுரம் என்ற இடத்தில் உள்ள ஒரு மண்டபத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. அதனால் இன்று மதியம் 12 மணிக்கு கட்டிடத்தை சுற்றியுள்ள வீடுகளில் வசிப்பவர்கள் யாரும் இருக்க வேண்டாம். அவர்கள் மண்டபத்திலோ அல்லது உறவினர்கள் வீட்டிலோ தங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாமல் இருக்க, காவல்துறையினர் சுமார் 500க்கும் மேற்பட்டோர் நிறுத்தப்பட்டிருக்கிறார்கள், மற்றும் சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் கட்டிடத்தை சுற்றி நிறுத்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக இன்று காலை 10 மணி முதல் அப்பகுதியில் மின்சாரம் இருக்காது மற்றும் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதாவது போரூர் - குன்றத்தூர் சாலையில் பிற்பகல் 12 மணியில் இருந்து மாலை 6 மணி வரை போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. டிரங்க்சாலை வழியாக குன்றத்தூர் செல்லும் வாகனங்கள் மணப்பாக்கம் சாலையை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். ஆற்காடு வழியாக செல்லும் வாகனங்கள் குமண்ன்சாவடி வழியாக குன்றத்தூர் செல்ல வேண்டும். குன்றத்தூரில் இருந்து வரும் வாகனங்களும் இதே வழியை பயன்படுத்த வேண்டும் என்று போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

Newsletter

கோவை உக்கடம் பெரிய குளத்தில் மிதக்கும் சோலார் பேனல்: கோடை வெயிலால் மின் உற்பத்தி இரு மடங்கு அதிகரிப்பு

கோவையில் வெயில் மிகுதியாக உள்ளதால் உக்கடம் பெரிய குளத்தில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல் மூலம் மின்சார உற்பத்த...

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...