சவுதி அரேபியாவில் கால்பந்து மைதானத்தில் வெடிகுண்டு தாக்குதல் முறியடிப்பு - ஐ.எஸ். தீவிரவாதிகள் கைது

உலக கோப்பை கால்பந்து போட்டி வருகிற 2018-ம் ஆண்டு நடைபெற உள்ளது. அதை தொடர்ந்து தற்போது அணிகளை தேர்வு செய்வதற்கான தகுதி போட்டிகள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சவுதி அரேபியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையேயான தகுதி போட்டி சவுதி அரேபியா தலைநகர் ஜெட்டாவில் உள்ள சர்வதேச கால்பந்து மைதானத்தில் நடைபெறுவதாக இருந்தது.

இதற்கிடையே ஐ.எஸ். தீவிரவாதிகள் என சந்தேகப்படும் 8 பேரை சவுதிஅரேபிய போலீசார் கைது செய்தனர். அவர்களில் 2 பேர் பாகிஸ்தானியர்கள். தலா ஒருவர் சூடானை சேர்ந்தவர்கள் மற்ற 4 பேர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது இப்போட்டியின் போது கால்பந்து மைதானத்தில் கார்குண்டு தாக்குதல் நடத்த ஐ.எஸ்.தீவிரவாதிகள் திட்டமிட்டு இருந்தது தெரியவந்தது. தற்போது இவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதன் மூலம் வெடி குண்டு தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டுள்ளது.

இது தீவிரவாதிகளின் 2-வது தாக்குதல் சதியாகும். இதற்கு முன்பு சவுதி அரேபியாவில் குவாதிப் தமாம் ஆகிய 2 நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். தீவிரவாதிகள் திட்டமிட்டனர். அச்சதி முறியடிக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக இங்கு தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...