ஆக்கிரமிப்புகளால் அடைபட்டு கிடைக்கும் 'கடலைக்கார சந்து'!


பெரிய அகலமான சாலைகள் மற்றும் வணிக வளாகங்கள் முன்பும், மக்கள் அதிகம் கூடும் இடங்கள் மற்றும் பிளாட்பாரங்களிலும் சிறிய அளவில் பெட்டிக்கடைகள் வைத்து ஆக்கிரமிப்பு செய்பவர்கள் பற்றி நமக்கு தெரியும். ஆனால் ஒரு குறுகிய சாலையை ஆக்கிரமிப்பு செய்து பொதுமக்கள் நடக்க கூட இடமில்லாமல் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பொது இடத்தை சில வணிகர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.

கோவையின் மத்திய பகுதியும், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ள இடத்தின் பக்கவாட்டு பகுதியில் அமைந்துள்ளது, இந்த 'கடலைக்கர சந்து'. சுமார் 15 அடி அகலமே கொண்ட இந்த சாலை,  வணிகர்களின் ஆதிக்கத்தால் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி 5 அடிக்கும் குறைவாக மாறியிருப்பது வேதனை. இந்த பகுதி முழுவதும் மின்சாதன பொருட்கள் மொத்த விற்பனை நடை பெற்றுவருகிறது. கோவையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சில்லறை வியாபாரிகள். இங்கு வந்து பொருட்கள் வாங்கிச்செல்கின்றனர். 

வியாபாரிகள் கடலைக்கார சந்தில் மின்சாதன பொருட்களை மொத்த விற்பனை செய்யும் கடைகளை அமைத்தனர்.  வியாபாரிகள் தங்கள் கடைகளை சாலைகளின் விளிம்புகள் வரை கட்டி வியாபாரம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல், கடையினுள் வைக்க வேண்டிய பல பொருட்களை காட்சி பொருளாக சாலைகளில் வைத்து ஜோராக விற்பனை செய்து வருகின்றனர். மீதமிருக்கும் குறுகிய இடத்தில் தங்கள் வாகனங்கள் மற்றும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை நிறுத்தி பொதுமக்கள்  நடப்பதற்கே சிரமத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இது குறித்து பலமுறை ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டும் மாநகராட்சி நிர்வாகமோ, காவல் துறையோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குமுறுகின்றனர் அப்பகுதி ஆட்டோ ஓட்டுனர்கள். கடலைக்கார சந்தின் அருகாமையில், அவிநாசி சாலை மேம்பாலம் உள்ளது இதன் அருகில் அரசின் வாகன நிறுத்தும் இடம் உள்ளது. அந்த இடத்தில் வாகனங்களை நிறுத்த அறிவுறுத்துவதன் பேரிலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஆக்கிரமிப்பாளர்களுக்கு அபராதம் விதிக்கும் பொருட்டு இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், பொதுமக்கள் தங்களது பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகள் குறித்து மாநகராட்சியிடம் புகார் அளிக்க 8190000200 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் தேர்த் திருவிழாவுக்கு தடை: அண்ணாமலை கண்டனம்

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலின் பங்குனி உத்திர தேர்த் திருவிழாவுக்கு பொதுப்பணித்துறை தடையில்லா சான்றிதழ் வழங்க மறுத்து...

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...