கோவையில் இரு பெண்கள் மாயம் - விசாரணை

கோவையில் அடுத்தடுத்து இரு கல்லூரி மாணவிகள் மாயமாகியுள்ள சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போத்தனூர் பகுதியைச் சேர்ந்தவர் சையத் ரஃபி. இவரது மனைவி தவுலத் விவி. இந்திரா கார்டன் பகுதியில் வசித்து வரும் இவர்களுக்கு நஷ்ரினா (19) என்ற மகள் உள்ளார். இவருக்கு பெற்றோர்கள் திருமணம் ஏற்பாடு செய்து வந்துள்ளனர். இதற்கு தொடர்ந்து, நஷ்ரினா மறுப்பு தெரிவித்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதாக கூறி விட்டு சென்ற நஷ்ரினா பின் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து பெற்றோர்கள் போத்தனூர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்ததையடுத்து காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவம்: உக்கடம் பகுதியைச் சேர்ந்தவர் மகபூப் செரிப். இவரது மகள் சாரா சம்சத் (22). தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். சனிக்கிழமையன்று கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற சாரா சம்சத் இரவு நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த மகபூப் செரிப் உக்கடம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...