"வாழ்க்கையை கொண்டாடுவோம்"- புற்றுநோயை வென்று வாழ்வோரின் நினைவுப் பயணம்


புற்றுநோய் என்ற சொல்லை பலரும் விரும்பாததன் காரணம் இந்த நோய் குறித்து இருக்கும் பயம் மற்றும் சந்தேகங்களே ஆகும். அனேகமாக இந்த நோயின் பக்கவிளைவுகள் மற்றும் நோயிலிருந்து மீண்டு வரும் விகிதம் குறைவாக இருப்பதும் கூட இதன் தொடர்புடையதாகும். ஆனால், நிறைய வகை புற்றுநோய்கள் ஆரம்பநிலையில் கண்டறியப்பட்டால் முழுமையாக குணப்படுத்தக்கூடியவை என்ற உண்மையை அனைவரும் தெரிந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று புற்றுநோய் எனப்படும் பயங்கரமான நோய்க்கு லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை முறை ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.

வெற்றிகரமான விளைவுக்கு தேவையானது ஆரம்ப நிலையிலேயே புற்று நோயைக் கண்டறிவது, மன உறுதி, சிகிச்சை முடியும் வரை முழு ஒத்துழைப்பு ஆகும். 

இதுகுறித்தான நிகழ்ச்சி கோவை ஜெம் மருத்துவமனையின் சார்பில் ''வாழ்க்கையை கொண்டாடுவோம்''- புற்றுநோயை வெற்றிகரமாக ஜெயித்து வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் ஒரு நினைவுப் பயனம் என்ற தலைப்பில் ஒரு கருத்தரங்கம் நடைபெற்றது.



இதில் பங்கேற்ற ஜெம் மருத்துவமனையின் நிறுவனர் மருத்துவர் சி.பழனிவேலு பேசுகையில், வயிறு மற்றும் குடல் சம்பந்தமான நோய்களை குறிப்பாக புற்றுநோயை லேப்பிராஸ்கோப்பி சிகிச்சை மூலம் குணப்படுத்தமுடியும் என்று தற்போதைய சிகிச்சை முறை பற்றி விளக்கினார். ஜெம் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்பட்ட பல புற்றுநோய் சிகிச்சை முறைகள் இன்று உலகம் முழுவதும் பின்பற்றக்கூடிய உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையாகும் என்பதையும் எடுத்துக்கூறினார்.



இந்நிகழ்ச்சியில், ரோட்டரி கிளப் மாவட்டம் 3201-ன் மாவட்ட இயக்குநர் பிரகாஷ் அங்கப்பன், துணை ஆளுநர் வரதராஜன் மற்றும் கூடுதல் ஆளுநரும் பங்கேற்று உரையாற்றினர்.

Newsletter

கிணத்துக்கடவு: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கோவை கிணத்துக்கடவு தொகுதி பாஜகவிற்கு ஒதுக்காததை எதிர்த்து ஈச்சனாரியில் போராட்டம் நடைபெற்ற போது, தொண்டர் ஒருவர் பெட்ரோல்...

கிணத்துக்கடவு தொகுதி ஒதுக்கீட்டில் அதிருப்தி: பாஜக தொண்டர் தீக்குளிக்க முயற்சி

கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் ஈச்சனாரியில் சாலை மறியல் நடத்திய நிலையில், ஒரு தொண்டர் உடலில் பெட்ரோலை ஊற...

தலைவர்களின் சிலைகளை மூடியிருப்பதை அகற்றாவிட்டால் நாங்கள் அகற்றுவோம் - தந்தை பெரியார் திராவிடர் கழகம்

மாநில தேர்தல் ஆணையர் சிலைகளை மூட வேண்டாம் என்று அறிவித்த பின்னரும், அண்ணா, காமராசர், கலைஞர், MGR சிலைகள் மூடப்பட்டுள்ளன....

LPG தட்டுப்பாடு: கோவை MSME துறைக்கு கடும் சவால்

எல்பிஜி தட்டுப்பாடு, செலவு உயர்வு மற்றும் தொழிலாளர் பிரச்சினைகள் காரணமாக கோவையில் ஃபவுண்ட்ரி மற்றும் பொறியியல் MSME துறை...

MSME நிலுவைத் தொகை தாமதம்: வரிச் சலுகை பாதிப்பு

MSME நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை தாமதித்தால் வரிச் சலுகை மறுக்கப்படும் என 43B(h) பிரிவு குறித்து பட்டய கணக்கா...

கோவையில் ‘Gift of Life’ சேவைக்கு சி.வி. ராம்குமார் விருது

கோவையில் எஸ்.என்.ஆர் சான்ஸ் அறக்கட்டளை தலைமை செயல் அதிகாரி சி.வி. ராம்குமாருக்கு ரோட்டரி கிளப் சார்பில் ‘மானுட ஐகான்’ வி...