11 மாதமே ஆன குழந்தைக்கு இருதய கோளாறு -கேஎம்சிஎச் மருத்துவமனை அறுவை சிகிச்சை

11 மாதமே ஆன ஜெகதீஷ் என்ற ஆண் குழந்தைக்கு அடிக்கடி சளி, காய்ச்சல் இருந்ததோடு, போதுமான வளர்ச்சியும் இல்லை என்று கடந்த வாரம் கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக பெற்றோர்கள் அனுமதித்தனர். சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த குழந்தையின் தாய் தமிழ்செல்வி 11வயதாக இருந்தபோது 2001-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இருதய கோளாறுக்காக கேஎம்சிஎச் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவருக்கு இருதயச்சுவர்களுக்கு இடையே உள்ள குறைபாட்டை நீக்க அறுவை சிகிச்சை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதை மனதில் கொண்ட இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுந்தரம், குழந்தைக்கும் அந்த பாதிப்பு இருக்கலாம் என சந்தேகமடைந்தார்.

பின்னர், குழந்தையை பரிசோதனை செய்தபோது (2.2செ.மீ-1.5 செ.மீ) அளவில், இரு தமனிகளுக்கும் இடையே உள்ள சுவற்றில் பாதிப்பு இருந்ததை கண்டுபிடித்தார். இது வேறு எந்த இருதய நோயுடனும் தொடர்புடையதாக இல்லை. எனவே, இருதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பாலசுந்தரம், குழந்தைக்கு அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தார். அறுவை சிகிச்சைக்குப்பின் குழந்தை, பூரண குணமடைந்து வீடு திரும்பினார்.

இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் தாய்க்கு சிறுவயதில் இருதய அறுவை சிகிச்சையை செய்ததும் டாக்டர் பாலசுந்தரம் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அறுவை சிகிச்சையில் குழந்தையின் தாய், ஆரோக்கியமாக வளர்ந்து, திருமணமாகி, தாம்பத்யத்திலும் எவ்வித சிக்கலும் இல்லாமல், ஒரு குழந்தைக்கு தாயாகியுள்ளார். எனவே இத்தகைய இருதய நோய் பற்றி உற்றார் உறவினர்களும், பெற்றோர்களும் நண்பர்களும் யாரும் கவலை கொள்ள தேவையில்லை. சரியான நேரத்தில், சரியான மருத்துவமனைக்கு சென்று, சரியான மருத்துவம் பெற்றால், விரைவில் குணமடைய முடியும். இதுபோன்ற இருதய கோளாறுகளை எளிதாக கண்டுபிடித்து, துல்லியமாக அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த முடியும்.

Newsletter

ஆரோ பல்கலைக்கழகம் வழங்கிய "Institutional Excellence" விருது ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு

குஜராத் சூரத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான ஹேக்கத்தான் நிகழ்வில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரிக்கு ஆரோ பல்கலைக்கழ...

கோவை தேர்வீதி சாலையில் கிடந்த ரூ.9,500 பணம் அடங்கிய பர்ஸை உரியவரிடம் ஒப்படைத்த 9 வயது மாணவிக்கு பாராட்டு

கோவை தாமஸ் வீதியை சேர்ந்த 9 வயது மாணவி ஜான்வி தேர்வீதி அருகே கிடந்த ரூ.9,500, ஏடிஎம் கார்டு, ஆதார் கார்டு அடங்கிய மணி பர...

சூலூரில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தீவிர வாக்குச் சேகரிப்பு: தளபதி முருகேசன் களப்பணி

கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் சூலூர் தொகுதி பாப்பம்பட்டி ஊராட்சியில் விவசாயத் தோட்டங்களில் 6-வது நாள் தேர்தல் பிரச்ச...

பெரியநாயக்கன்பாளையம் பயனீர் கலை அறிவியல் கல்லூரி ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது

பெரியநாயக்கன்பாளையம் ஜோதிபுரத்தில் உள்ள பயனீர் கலை அறிவியல் கல்லூரியின் ஆண்டு விழா நடைபெற்றது. கல்வியில் சிறப்பிடம் பெற்...

பொள்ளாச்சியில் அதிமுக தேர்தல் பரப்புரை: Jayaraman வாக்குச் சேகரிப்பு

பொள்ளாச்சி அண்ணா நகர் மற்றும் விஜயபுரம் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் Jayaraman தலைமையில் அதிமுக கட்சியினர் தீவிர வாக்குச...

கோவை மருதமலை முருகன் கோவிலில் NDA வெற்றிக்காக சிறப்பு பூஜை

கோவை மருதமலை முருகன் கோவிலில் வரவிருக்கும் தேர்தலில் National Democratic Alliance அமோக வெற்றி பெற வேண்டி சிறப்பு பூஜை நட...