திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த ஒன்பது நைஜீரியர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர்: திருப்பூரில் முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த ஒன்பது நைஜீரியர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாவட்டம் ஊத்துகுளி காவல் நிலைய ஆய்வாளர் சுந்தரபாண்டி திங்கட்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, ஊத்துகுளி சாலை பெரியபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்த ஒன்பது நைஜீர்யர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் முன்னுக்கு பின் முரனாகப் பதில் அளித்தனர்.

மேலும், விசா மற்றும் கடவுச்சீட்டு தாங்கியுள்ள வீட்டில் வைத்திருப்பதாக போலீசாரிடம் தெரிவித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அவர்களை தங்கியிருந்த அறைக்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். அப்போது, 9 பேரிடமும் விசா மற்றும் கடவுச்சீட்டு இல்லை என்பது தெரியவந்தது.
தொடர்ந்து, முறையான ஆவணங்களின்றி தங்கியிருந்த பிளெசிங்கு, சென்னெடு, டெய்க், வின்செண்ட், கெச்கூவ், உகாச்கூவ், ஸ்டிபண் ஜோனாதம், சக்கூவ்மேகா, சென்னெடு ஆகிய ஒன்பது நைஜீரியர்களை கைது செய்த போலீசார், அவர்களை நீதிபதி முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.