சபரிமலை நடை ஒரு மாதம் அடைக்கப்படுகிறது: பத்திரிக்கையாளர்கள் வெளியேற உத்தரவு

ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்து இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. இனி மண்டல பூஜைக்காக, வரும் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்து இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை அடைக்கப்பட உள்ளது. இனி மண்டல பூஜைக்காக, வரும் கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆங்கில செய்தி டிவி சேனல்கள் சபரிமலைக்கு பெண்களை வருவதற்காக தூண்டிவிடுகின்றன என்று சபரிமலையில் போராட்டக்காரர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதேபோன்று சபரிமலையில் செய்தி சேகரிப்பதற்காக ஆங்கில டிவி சேனல்கள் பெரும்பாலும் பெண்களையே அனுப்பியிருந்தனர். எனவே அவர்களும் கல்வீச்சுத் தாக்குதலுக்கு தப்பவில்லை.

இந்த நிலையில், கேரள வாலிபர் ஒருவர் நேற்று வெளியிட்டிருந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதில் பிரபல ஆங்கில செய்தி தொலைக்காட்சி, ஆசிரியரை அவர் மிரட்டுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இப்பொழுது, உங்கள் பத்திரிகையாளர்களை தான் அடித்து விரட்டி உள்ளோம். நீங்கள் சபரிமலைக்கு வந்தால் உங்களையும் அடிப்போம் என்று அந்த வாலிபர் கூறுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.

இந்த நிலையில் சபரிமலை சன்னிதானம் மற்றும் பம்பையில் உள்ள செய்தியாளர்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை, கேரள அரசுக்கு எச்சரித்துள்ளது, உளவுத்துறை எச்சரிக்கையை அடுத்து சன்னிதானம் மற்றும் பம்பையில் இருந்து அனைத்து பத்திரிகையாளர்கள் வெளியேற வேண்டும் என்று கேரள காவல்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

நடை

ஐப்பசி மாத பூஜை நிறைவடைந்து இன்று சபரிமலை ஐயப்பன் கோயில் நடை சாத்தப்பட்ட உள்ளது. இனிமேல் மண்டல பூஜைக்காக, கார்த்திகை மாதம் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...