நீலகிரி: ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தனது அணிவகுப்பை ஒவ்வொரு மாநிலத்திலும் நடத்துவது வழக்கம்.இதன் ஒருபகுதியாக இந்த அணிவகுப்பு உதகையிலுள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் இன்று தொடங்கியது.

இந்த அணிவகுப்பில், தேசப்பற்றுமிக்க சொற்பொழிவுகள், 'பாரதத்தை காப்போம்' உள்ளிட்ட பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டு அணிவகுப்பு நடைபெற்றது.

நகரின் முக்கிய வீதிகள் வழியே வந்த அணிவகுப்பு ஏ.டி.சி திடலில் உள்ள காந்தி மைதானம் சென்றடைந்தது. தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ் மூலம் பல்வேறு பயிற்சிகளான தியானம், கராத்தே, சிலம்பம் உள்ளிட்ட பயிற்சிகள் நடைபெற்றது.

மாவட்ட ஆர்.எஸ்.எஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் தொண்டர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.