சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி குறித்து டிசம்பர் மாதம் அறிவிப்பார் என அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக அரசியலுக்கு வருவதாக சொல்லி வந்த நிலையில் சமீபத்தில் தனது அரசியல் வரவை உறுதிப்படுத்தினார். அதையடுத்து அவரது ரசிகர் மன்றங்கள் ரஜினி மக்கள் மன்றங்களாக மாற்றப்பட்டு அரசியல் பணிகளில் இறங்கின
தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வந்த ரஜினி பேட்ட படப்பிடிப்புக்கு பிறகு நேற்று சென்னை திரும்பினார். சமீபத்திய அவரது அரசியல் நடவடிக்கைகள் மூலம், டிசம்பர் 12-ம் தேதி தனது கட்சி குறித்து அறிவிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினி, டிசம்பர் 12-ம் தேதி கட்சி அறிவிப்பு இல்லை என தெரிவித்தார். இதனால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
இந்நிலையில், இன்று அவரது அண்ணன் சத்தியநாராயண ராவ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ரஜினி அரசியல் கட்சி துவங்குவதற்கு பின்னால் பாஜக இல்லை என தெரிவித்துள்ளார். மேலும், ரஜினி தனது கட்சி குறித்த அறிவிப்பை டிசம்பரில் அறிவிப்பார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அவரது அண்ணனின் இந்த மாறுபட்ட கருத்துக்களால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.