கோவை: கோவை அருகே வீட்டில் புகுந்து மகனின் கழுத்தில் கத்தி வைத்து தாயிடம் இருந்து நகை மற்றும் பணத்தை பறித்துச் சென்ற கொள்ளையனை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

சூலூர் அருகேயுள்ள நஞ்சப்பத்தேவர் வீதியைச் சேர்ந்தவர் மூர்த்தி (40). இவர் தனியார் ஆலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார்.
இவரது மனைவி இளவரசி (33) மகன் மனோஜ் (6). நேற்று மதியம் மூர்த்தி வேலை நிமித்தமாக வெளியே சென்று இருந்தார்.
அப்போது, ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வீட்டின் காம்பவுண்ட் சுவர் வழியே ஏறி வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் ஒருவர் மகன் மனோஜின் கழுத்தில் கத்தி வைத்து இளவரிசியிடம் வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை தன்னிடம் தருமாறு கேட்டுள்ளார்.
மேலும், பணம், நகைகளை தரவில்லை என்றால் மகன் மனோஜை கொன்று விடுவதாக மர்ம நபர் மிரட்டியுள்ளார்.
இதனால் பயந்து போன இளவரசி தன்னிடம் இருந்த 17 பவுன் நகை மற்றும் 5000 ரூபாய் ரொக்கத்தை அந்த கொள்ளையனிடம் கொடுத்துள்ளார்.
பின்னர் நகை மற்றும் பணத்தை வாங்கிக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இளவரசி கணவருக்கு தகவலளித்தார். இது தொடர்பாக முர்த்தி அளித்த புகாரின் அடிப்படையில் சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து நகை மற்றும் பணம் பறித்த வாலிபரை தேடி வருகின்றனர்.
கடந்த ஒரு ஆண்டாகவே சூலூர் பகுதியில் அடிக்கடி தொடர்ந்து கொள்ளைகள் அரங்கேறிக் கொண்டே செல்கிறது.
இதைத் தடுக்க காவல்துறையினரின் ரோந்து பணிகளை அதிகப்படுத்துவதுடன் ஆள் நடமாட்டம் இல்லாத குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் கண்காணிப்பு கேமராக்களை வைத்து குற்றவாளிகளை பிடித்து கடுமையான தண்டனைகள் கொடுக்க வேண்டும் என சூலூர் பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.