நீலகிரி: நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல் துறை சார்பில், ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களில் சிக்குபவர்கள் உடனே 'மொபைல் போன்' மூலம் தகவல் தெரிவிக்க ஏதுவான 'காவலன் மொபைல் ஆப்' பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நீலகிரி : நீலகிரி மாவட்டம் குன்னூரில் காவல் துறை சார்பில், ஆபத்துக்கள் மற்றும் விபத்துக்களில் சிக்குபவர்கள் உடனே 'மொபைல் போன்' மூலம் தகவல் தெரிவிக்க ஏதுவான 'காவலன் மொபைல் ஆப்' பயன்படுத்துவது குறித்து விளக்கமளிக்கும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காவல் துறை துணை கண்காணிப்பாளர் கிருஷ்ண மூர்த்தி தலைமையில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்ற இந்த நிகழ்ச்சி குறித்து காவல் துறையினர் கூறுகையில், 'அனைத்து 'ஆண்ட்ராய்டு' போன்களிலும் இந்த மொபைல் ஆப் ஐ பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பின்னர், போன் செய்வதற்கு பதில், மொபைல் போனில் ஒரு பட்டனை தொட்டாலே உடனடியாக 'ஜி.பி.எஸ்' மூலம் ஒலி, ஒளியுடன் கூடிய வீடியோ கால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்துவிடும்.
மேலும், ஆபத்து மற்றும் விபத்துக்களில் சிக்கியவர்களின் இடம் மற்றும் நேரத்தை காட்டுவதால், உடனடியாக காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று உதவி புரிய ஏதுவாகும்.
ஆண்ட்ராய்டு போன் வைத்துள்ளவர்கள் அனைவரும் இந்த செயலியை பதிவிறக்கம் செய்து வைத்துக்கொண்டு தேவைப்படும் நேரங்களில் பயன்படுத்தி பயன்பெறலாம்". என்றனர்.
இந்த நிகழ்யில் போக்குவரத்து ஆய்வாளர் முரளி, காவல் ஆய்வாளர், சுப்ரமணி, துணை ஆய்வாளர்கள் ரகுவரன்,சம்பத், பெள்ளி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இந்த நிகழ்சியில் பொது மக்களுக்கு விளக்கம் அடங்கிய துண்டுபிரசுரங்கள் வினியோகம் செய்யப்பட்டது.