கோவை : அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாட தமிழக அரசு விதித்துள்ள தடைக்கு தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் கு. ராமகிருட்டிணன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

ஆயுத பூஜை பண்டிகையை முன்னிட்டு, அரசு அலுவலகங்களில் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் மத அடிப்படையிலான எவ்வித நிகழ்ச்சிகளும் நடத்தக்கூடாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், இதை மீறி சில அலுவலகங்களில் ஆயுத பூஜை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், இந்த கொண்டாட்டங்களை தடுத்து நிறுத்தவும், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் திராவிட விடுதலை கழகம் மற்றும் தந்தை பெரியார் திடாவிட கழகத்தினர் அரசு அலுவலகங்கள் மற்றும் காவல் நிலையங்களை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத அடிப்படையிலான பண்டிகைகளைக் கொண்டாடக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், காவல் கூடுதல் ஆணையர்கள் வடக்கு, தெற்கு மற்றும் போக்குவரத்து குறித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு, எந்தவித அசம்பாவிதங்கள் ஏதும் நிகழக்கூடாத வண்ணம், சட்டம், ஒழுங்கு மற்றும் பொது அமைதி காத்திடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
"அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போன்ற மத அடிப்படையிலான பண்டிகைகளை கொண்டாட தடை விதித்த தமிழக அரசின் நடவடிக்கை வரவேற்கத்தக்கது. இதுபோன்ற நடவடிக்கைகள் முன்னாள் முதலமைச்சர் அண்ணா காலத்தில் இருந்தே கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அரசின் இந்த உத்தரவு வெறும் பெயரளவில் இல்லாமல், தடையை மீறி ஏதேனும் அரசு அலுவலகங்களில் மதம் சார்ந்த பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றதா..? என்பதை கண்காணிக்க வேண்டும்.
மீறி கொண்டாடப்படுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிடில், திராவிட கழகங்களின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும்," என கூறினார் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.ராமகிருட்டிணன்.
கடந்த 2010-ம் ஆண்டு பேசின்பிரிட்ஜ் கவல்நிலையத்தில் நடந்த ஆயுத பூஜையை எதிர்த்து பெரியார் திடாவிட கழகத்தினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.