நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவ மழையின் தாக்கம் உதகை, கூடலூர் பாேன்ற பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.

இந்தநிலையில், இன்னும் சில தினங்களில் தொடங்க இருக்கும் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குன்னூர், காேத்தகிரி பகுதிகளில் அதிகம் இருக்க வாய்ப்பிருப்பதால் தீயணைப்புத் துறையினர் தயாராக இருப்பதாக மாவட்ட தீயணைப்புத் துறை அதிகாரி சுப்ரமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் நமக்களித்த பிரத்தியேக பேட்டியில் கூறுகையில், "மாவட்டம் முழுவதும் 14 வாகனங்கள் உதவியுடன் 75 வீரர்கள், 18 பவர் ஷா எனப்படும் மரம் அறுக்கும் இயந்திரங்களுடன் தயாராக உள்ளனர்.

மேலும், பள்ளி மாணவ-மாணவியர்களுக்கும், பாெது மக்களுக்கும் பேரிடர் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடத்தி வருகிறோம்.
நிலச்சரிவு பாேன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் ஜேசிபி பாேன்ற வாகனங்களும் தயாராக உள்ளன.
வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்பதற்காக ரப்பர் படகு ஒன்றும் தற்போது நீலகிரி தீயணைப்புத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது." என்றார்.