கோவை : கோவை அரசு மருத்துவமனையில் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்கு, கோவை சேட்டிலைட் ரோட்டரி கிளப் சார்பில் புதிய கட்டிடம் கட்டும் பணிகளுக்கான பூமி பூஜை போடப்பட்டது.

கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இருக்கும் குழந்தைகள் அவசர சிகிச்சை பிரிவில் கோவை மாவட்டத்தில் உள்ள ஏழை குழந்தைகள் மட்டுமில்லாமல், ஈரோடு, திருப்பூர், நீலகிரி, சேலம், திண்டுக்கல், நாமக்கல் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர். சிகிச்சை பெறும் குழந்தைகளுக்காக 10 படுக்கைகளுடன் கூடிய வென்டிலேட்டர் உள்ளிட்ட நவீன கருவிகளும் உள்ளன.

மருத்துவமனையின் புதுப்பிற்காக பழைய கட்டிடம் இடிக்கப்பட்டுள்ள நிலையில், நியூரோ பிளாஸ்டிக் பிளாக்கில், தற்காலிகமாக குழந்தைகள் அவசர சிகிச்சை செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அதிநவீன வசதிகளுடன் கட்டப்படவிருக்கும் குழந்தைகள் சிகிச்சை பிரிவு மையத்தின் கட்டுமானப் பணிகள் பூமி பூஜைகளுடன் இன்று தொடங்கியது. கோவை சேட்டிலைட் ரோட்டரி கிளப்பின் பங்களிப்புடன் கட்டப்படும் இந்தக் கட்டிடத்தில், குழந்தைகளுக்கான அதிதீவிர சிகிச்சை மையம், பொது வார்டுகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் செயல்பட இருக்கின்றன. இந்த நிகழ்ச்சியில், கோவை சேட்டிலைட் ரோட்டரி கிளப்பின் மாவட்ட கவர்னர் ஏ.வி.பதி, துணை கவர்னர் ஆர். சரவணன் மற்றும் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தலைவர் டாக்டர் அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.