திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அமராவதி அணை 90 அடி கொள்ளளவு கொண்டது. கடந்த ஒரு வாரமாக மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் கேரளாவில் பெய்து வரும் தொடர் கனமழையால் அமராவதி அணைக்கு அதிகளவு நீர்வரத்து வந்து கொண்டிருக்கிறது.

இதனால் அணையின் நீர்மட்டம் விரைவாக உயரத் தொடங்கியது. தற்போது அணையில் 86 அடிக்கு மேல் நீர் இருப்பு உள்ளது. அதே நேரத்தில் திருப்பூர், கரூர் மாவட்ட விவசாயிகள் பெருமளவில் நெல் பயிரிட்டுள்ளனர். இந்த சூழலில், பாசன தேவைக்காக அமராவதி அணையிலிருந்து வினாடிக்கு 1,156 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நெல் அறுவடை காலம் முடியும் வரை தொடர்ந்து தண்ணீர் வழங்கத் தேவையான அளவு நீர் இருப்பு உள்ளதால் முதல்போக சாகுபடி முடிந்தவுடன் இரண்டாம் போக நெல் சாகுபடியும் செய்ய முடியும் என்ற எதிர்பார்ப்பு விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.

தற்போது உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் 1,50,000 ஏக்கருக்கு மேல் நெல் நடவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 961 கன அடியாக உள்ளது. பொதுப்பணிதுறை அதிகாரிகள் அணையின் நீர் இருப்பைக் கணக்கிட்டு அமராவதி ஆற்றில் தண்ணீர் திறந்து விட்டால் பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடர்ந்து இரண்டாம் போக நெல் சாகுபடி செய்ய முடியும் நிலையை உருவாக்கலாம்.