கோவை வனக்கோட்டத்தில் புலிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

கோவை: ஆண்டுதோறும் கோவையில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கோயம்புத்தூர் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது.

கோவை: ஆண்டுதோறும் கோவையில் புலிகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, கோயம்புத்தூர் வனப்பகுதிகளில் உள்ள புலிகள் குறித்த கணக்கெடுப்பு கடந்த 8-ம் தேதி தொடங்கி 12-ம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற்றது.

இந்த பணியில், தன்னார்வலர்கள், வனத்துறையினர் என மொத்தம் 100 பேர் இந்த ஈடுபட்டனர். புலிகளை நேரடியாகப் பார்த்தல், காமிரா கொண்டு கண்காணித்தல், காலடித் தடம் கொண்டு அறிதல் போன்ற பல்வேறு முறைகளில் புலிகள் கணக்கெடுப்பு நடைபெற்றது.

அதன்படி, கோவை வனப்பகுதிகளுக்குள் ஏராளமான இடங்களில் புலிகள் இருப்பது தெரியவந்துள்ளது.

முதுமலை மற்றும் சத்தியமங்கலம் புலிகளின் காப்பகம் ஆகிய பகுதிகளும் கோயம்புத்தூர் வனப்பகுதிகளும் புலிகளால் மிகவும் பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேட்டுப்பாளையம் மற்றும் சிறுமுகை சரங்கங்களில் காமிராவின் கண்களில் புலிகள் சிகியுள்ளன.

தற்போது நிறைவு பெற்றுள்ள கணக்கெடுப்பின் மூலம் பல்வேறு பகுதிகளில் புலிகளின் காலடித் தடங்கள் மற்றும் சுவடுகள் பதிவானது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில், சிறுத்தைகள், மான்கள் மற்றும் யானைகளை கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டவர்கள் நேரடியாக பார்த்துள்ளனர்.

புலிகள் எண்ணிக்கை குறித்து நல்ல முடிவு வெளியாகியுள்ளதால் வனத்துறை அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். "புலிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது ஒரு இடத்தின் நிலப்பரப்பு நல்ல நிலையில் உள்ளது என்பதை காட்டுகிறது. கோவையில் புலிகள் நல்ல நிலைமையில் வாழ்வதைத் தெரிந்து கொள்ள முடிகிறது." என்கின்றனர் வனத்துறை அதிகாரிகள்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...