கோவை : சந்திரகாந்தி பள்ளியில் பிஞ்சுக் குழந்தைகளுடன் நவராத்திரி பண்டிகையை பள்ளி நிர்வாகம் கோலாகலமாகக் கொண்டாடியது
கோவை : சந்திரகாந்தி பள்ளியில் பிஞ்சுக் குழந்தைகளுடன் நவராத்திரி பண்டிகையை பள்ளி நிர்வாகம் கோலாகலமாகக் கொண்டாடியது.
ஆண்டுதோறும் 'ஒருமாணவன், ஒரு பொம்மை' என்ற அடிப்படையில் 10-ம் ஆண்டாக சந்திரகாந்தி பள்ளியில் நவராத்திரி பண்டிகைக் கொண்டாடப்பட்டு வருகிறது. 'ஆறுபடைவீடு' என்பதை மையமாகக் கொண்டு, ஏராளமான பொம்மைகளைக் கொண்டு கொலு வைத்து வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த 10 நாட்களில் மாணவர்கள் கர்னாடிக் பாடல்கள் பாடியும், நடனமாடியும் இந்தப் பண்டிகையை மகிழ்ச்சியாகக் கொண்டாடி வருகின்றனர். மேலும், இந்த நிகழ்வில், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.