கோவை: 40% போனஸ், பணிவரன் முறைப்படுத்துதல், மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் இன்று டாஸ்மாக் ஊழியர் சங்கத்தினர் (சி.ஐ.டி.யூ) ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

லாபத்தில் இயங்கும் டாஸ்மாக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு 20 சதவீத போனஸ் 20 சதவீத கருணை தொகை என நாற்பது சதவீத போனஸ் வழங்கிட வேண்டும், நிலையான சட்டத்தை உருவாக்கி பணிவரனை முறைப்படுத்த வேண்டும், மதுபான பாட்டில்களை கடைகளுக்கு கொண்டு வரும் ஒப்பந்த சுமைபணி பணியாளர்களே இறக்கித் தர வேண்டும், அரசியல் கட்சி போர்வையில் பனம் கேட்டு மிரட்டும் நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டாஸ்மாக் ஊழியர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
கோவை மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் (சி.ஐ.டி.யூ) தலைவர் மூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 30-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இது குறித்து மாவட்ட செயலாளர் ஜான் கூறுகையில், "டாஸ்மாக் கடைகளில் விற்பனையை முறைப்படுத்த கேஷ் கவுன்டர், சேல்ஸ் கவுன்டர், பில்லிங் மிஷின் சி.சி.டி.வி காமிரா, நவீன பண பெட்டகம், குடிநீர், கழிப்பிட வசதி ஏற்படுத்தித் தர வேண்டும்.
சென்னையைப் போல் விற்பனை பணத்தை நிர்வாகமே நேரிடையாக வசூல் செய்ய வேண்டும். ஆய்வின் போது ஏற்படும் குறைபாடுகளுக்கு அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு நியாயமான கோரிக்கைகள் மீது தீர்வு காண உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்." என்றார்.