கோவை : கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கான பாதாள சாக்கடைத் திட்ட கழிவுநீர் சேகரிப்பு அமைப்புக்காக ரூ.415 கோடி மதிப்பிலான பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பூமிபூஜை செய்து தொடக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி ஆணையாளர் மற்றும் தனி அலுவலர் மரு.க.விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சி.மகேந்திரன், கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை.ஏ.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது :- கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு ரூ. 165 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன் மாநகரப் பகுதிகளில் வழங்கப்படும் குடிநீர் அளவிற்கு இப்பகுதிகளுக்கும் வழங்கப்படும்.
கோவை மாநகராட்சியுடன் இணைந்த குறிச்சி, குனியமுத்தூர், வார்டு 87-100 பகுதிகளுக்கு பாதாள சாக்கடைத் திட்டம் இல்லாததால், கழிவு நீர் ஆற்றில் கலந்து ஆற்று நீர் மாசுபடும் சூழ்நிலை உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு பாதாள சாக்கடைத் திட்டம் தயாரிக்கப்பட்டு, ரூ. 442.00 கோடி மதிப்பீட்டுக்கு அரசாணைவெளியிடப்பட்டது. தற்போது, இம்மாநகராட்சி பகுதிகளுக்கு கழிவு நீர் சேகரிப்பு அமைப்பு அமைக்க ரூ.415.00 கோடி மதிப்பீட்டுக்கு திட்டம் துவங்கப்படுகிறது.
இத்திட்டம் கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளுக்கு 14 வார்டுகளும் பயன்பெறும் வகையில் 2050-ஆம் ஆண்டு மக்கள் தொகையான 5,17,186 எனக் கணக்கிடப்பட்டு தினமும் 53.07 மில்லியன் லிட்டர் (2050) கழிவு நீர் சுத்திகரிக்கப்படும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இம்மாநகராட்சி பகுதிகளை 13 மண்டலங்களாகப் பிரித்து, முழுவதும் கழிவு நீர் சேகரிப்பு குழாய்கள் பதிக்கவும், 11 இடங்களில் கழிவு நீர் உந்து நிலையங்களும், 19 இடங்களில் கழிவு நீர் மேலேற்றும் நிலையங்களும் மற்றும் 5 மேலேற்று ஆள் நுழை குழிகளும் அமைத்துக் கழிவு நீர் சேகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பின்னர் ,சேகரிக்கப்பட்ட கழிவு நீர் வெள்ளளுரில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கிற்கு பின்புறம் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு முழுமையாக சுத்திகரிக்கப்படும். மேலும், அனைத்து கழிவு நீர் உந்து நிலையங்களிலும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களுடன் கூடிய, துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்தும் கருவி பொருத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. இறுதியாக சுத்திகரிக்கப்பட்ட கழிவு நீர் நொய்யல் ஆற்றில் விடப்படும்.
இத்திட்டப் பணிகள் 42 மாதங்களில் நிலைவேற்றப்பட்டு முழுமையாகத் திட்டம் பயனுக்கு வரும்பொழுது கோவை மாநகராட்சியுடன் புதிதாக இணைக்கப்பட்ட குறிச்சி, குனியமுத்தூர் பகுதிகளில் உள்ள 14 வார்டுகளும் முழுமையான சுகாதார வசதிபெறுவதுடன், கழிவு நீர் ஆற்றில் கலந்து நீர் ஆதாரங்கள் மாசுபடுவதும் தடுக்கப்படும், இவ்வாறு அவர் கூறினார்.