உதகையில் இன்று காலை முதல் பரவலாக மழை : பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று காலை முதல் பெய்து வரும் பரவலான மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.



 

மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழையின் தாக்கம் அதிகரித்து காணப்படும். இந்த மழையின் போது உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு போன்ற பகுதிகளில் மழை அதிகளவு பெய்யும். இந்தாண்டு இன்னும் ஒரு சில தினங்களில் வடகிழக்கு பருவமழை துவங்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டுள்ள நிலையில், கடந்த சில தினங்களாக உதகை மற்றும் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் காலை முதல் வெயில் அடித்து வந்தது. 



இந்த நிலையில், இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் கூடிய காலநிலை நிலவி வந்த நிலையில், திடீரென உதகையில் மட்டும் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் சூழ்ந்தது. தொடர்ந்து கனமழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...