கோவை : உலகளவில் அழிந்து வரும் இனங்களான கழுகுகளை பாதுகாக்கும் விதமாக, அருளகம் சார்பில் ஸ்லோகன் போட்டி நடத்தப்படுகிறது.

இது தொடர்பாக அருளகத்தின் செயலாளர் எஸ். பாரதிதாசன் கூறியதாவது :- திறந்தவெளியில் நடத்தப்படும் இந்தப் போட்டியில் ஒருவர் எத்தனை ஸ்லோகன்களை வேண்டுமானாலும் சமர்ப்பிக்கலாம். தமிழ், ஆங்கிலம் என இருமொழிகளிலும் எழுதி அனுப்பலாம். ஆனால், தமிழுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். அழிந்து வரும் கழுகு இனங்களைப் பாதுகாக்கும் நேர்மறையான கருத்துக்கள் இடம்பெற்றிருக்க வேண்டும். முதல் 10 இடங்களை பிடிப்பவர்களுக்கு தலா ரூ.1,000 வழங்கப்படும்.
கழுகுகள் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றி வருகிறது. பறவைகள் இனங்களிலேயே மிகவும் அச்சுறுத்தலானது கழுகுகள்தான். ஆனால், மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகளால், தற்போது அழிந்து வரும் இனங்களாக அவை மாறியுள்ளன, என்றார்.
ஏற்கனவே, நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் கழுகு இனத்தின் எண்ணிக்கையை அதிகரித்து அவற்றைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அருளகம் மேற்கொண்டுள்ளது. இதற்கு, வனத்துறையினர், கால்நடை மருத்துவர்கள், போதை தடுப்புத்துறை மற்றும் கால்நடைகளின் உரிமையாளர்கள், மருந்தாளுநர்கள், மாவட்ட நிர்வாகம் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் ஆதரவளித்தனர். சத்தியமங்கலம், முதுமலை மற்றும் சிறுமுகை போன்ற பகுதிகளில் 4 வகையான கழுகினங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.
அக்., 22-ம் தேதிக்குள் ஸ்லோகன்களை எழுதி அனுப்ப வேண்டிய முகவரி : அருளகம், எல்லப்பபாளையம், கோவை - 641697, எஸ்.எம்.எஸ். மற்றும் வாட்ஸ்அப் எண் : 8754249983. இ.மெயில் முகவரி : [email protected].