கோவையில் ரயிலில் பெண்ணிடம் சங்கிலி பறிப்பு: வடமாநில வாலிபர் கைது

கோவை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

கோவை: ஓடும் ரயிலில் பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறித்ததாக கைது செய்யப்பட்ட வடமாநில வாலிபரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்தவர் பானுமதி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலத்தில் இருந்து கோழிக்கோடு செல்வதற்காக யஷ்வந்த்பூர்-கண்ணூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தார்.

அப்போது கோவை அருகே ரயில் வரும்போது பானுமதி அணிந்திருந்த 10 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு இளைஞர் ஒருவர் தப்பித்து ஓடினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து கோவை ரயில்வே போலீஸில் பானுமதி புகார் அளித்தார்.

புகாரைத் தொடர்ந்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையனை தேடி வந்தனர். அப்போது அரக்கோணம் அருகே மற்றொரு சம்பவத்தில் ஈடுபட்ட வடமாநில ஆசாமியை ரயில்வே போலீசார் மடக்கிப் பிடித்தனர். பின்னர் இவரிடம் நடத்திய விசாரணையில் இவர் தான் பானுமதியிடம் 10 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றது தெரியவந்துள்ளது.

அவரிடம் நடத்திய விசாரணையில் நாக்பூரை சேர்ந்த பிரபல கொள்ளையன் உத்தம் பட்டேல் (32) என்பது தெரியவந்தது. பின்னர் அவனை போலீசார் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்தனர்.

அவர் மீது கோவை, சென்னை, திருச்சி, மதுரை, சேலம், ஜோலார்பேட்டை, உட்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் ரயிலில் நடந்த கொள்ளை வழக்குகள் பதிவாகி உள்ளன. இந்த நிலையில் உத்தம் படேலை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோவை ரயில்வே போலீசார் திட்டமிட்டனர்.

இதைத்தொடர்ந்து கோவை 6-எண் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் கோவை ரயில்வே போலீசார் மனு தாக்கல் செய்தனர். அதில் ரயில் கொள்ளையனை 5- நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அனுமதி கேட்டிருந்தனர். அந்த மனு மாஜிஸ்திரேட் முன்பு விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து 5 நாள் போலீஸ் காவலில் விசாரணை நடத்த மாஜிஸ்திரேட் அனுமதி அளித்தார்.

அதன் பேரில் கோவை ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் லாரன்ஸ், சப் இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் தனிப்படையினர் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உத்தம் படேலை பலத்த பாதுகாப்புடன் அவனது சொந்த ஊரான நாக்பூரில் உள்ள ஜாரிபக்கர் கிராமத்திற்கு அழைத்துச் செல்கின்றனர்.

இந்த ரயில் கொள்ளையன் ஓடும் ரயிலில் யார் யாரிடம் கொள்ளையில் ஈடுபட்டான்? அவனிடம் நகைகளை இழந்தது யார்? என்பது குறித்தும் கோவை ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...