கோவையில் மதுக்கடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கொலை : ரத்தக்கரை காய்வதற்குள் மீண்டும் திறந்தது கடை

கோவை: சூலூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்த வந்தவர் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர், அவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சூலூர் அருகே உள்ள ஒரு டாஸ்மாக் பாரில் மது அருந்த வந்தவர் பணம் கொடுக்காமல் தகராறில் ஈடுபட்டதால் ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர், அவரை கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சூலூர் அருகே உள்ள பள்ளபாளையம் பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்துள்ளது. இந்த டாஸ்மாக் கடையின் அருகிலேயே டாஸ்மாக் பாரும் அமைந்துள்ளது. இந்த பார்-ஐ முருகானந்தம் (41) என்பவர் நடத்தி வருகிறார். இந்த பாருக்கு பள்ளபாளையம் பகுதியின் இந்து மக்கள் கட்சியின் பகுதிப் பொறுப்பாளரான அருண் (30) என்பவர் தினமும் மாலை நேரங்களில் தனது நண்பர்களுடன் மது அருந்த வருவது வழக்கம்.



அப்படி வரும் பொழுதெல்லாம் அருண் பாரில் வாங்கும் பொருட்களுக்கு பணம் கொடுக்காமல் செல்வதை வாடிக்கையாக வைத்திருக்கிறார். நேற்றைய தினம் வழக்கம் போல நண்பர்களுடன் வந்து மது அருந்திவிட்டு பணம் கொடுக்காமல் அருண் சென்றுள்ளார். அப்போது பார் உரிமையாளர் முருகானந்தம் பணம் கொடுக்கும் படி கேட்டிருக்கிறார். இந்தநிலையில் அருணுக்கும் முருகானந்த்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இப்படியிருக்க திடீரென அருண் தனது கையிலிருந்த பீர் பாட்டிலால் பார் உரிமையாளரை தாக்கினார். இதில் ஆத்திரமடைந்த பார் உரிமையாளர் முருகானந்தம் அருகில் இருந்த கத்தியை எடுத்து அருணை குத்தினார். இதில் சம்பவ இடத்திலேயே அருண் உயிரிழந்தார்.

அவருடன் இருந்த கோபால் (25) என்பவர் படுகாயமடைந்தார். பின்னர், அருகில் இருந்தவர்கள் காயமடைந்த கோபாலை கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேபோல காயம் அடைந்திருந்த டாஸ்மாக் பார் உரிமையாளர் முருகானந்தமும் சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதில் முருகானந்ததுடன் இருந்த சதீஷ் (25) என்பவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மேலும், கொலை சம்பவம் குறித்து முருகானந்தம் மற்றும் சதீஷ் மீது சூலூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இப்படியாக பல பிரச்சனைகள் நடந்திருக்க, கொலை சம்பவம் நடந்த அந்த கடையில், ரத்தக்கரை காய்வதற்குள் மீண்டும் விற்பனை அமோகமாக தொடங்கியது. வழக்கம்போல, 10 மணிக்கு பிறகும் சட்டவிரோதமாக மது விற்பனை அந்த கடையில் நடைபெற்றது.

இந்த சம்பவம் சுற்று வட்டாரப் பகுதி மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...