கோவை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, தமிழகத்தில் உள்ள மகளிர் விடுதிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கோவை: பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக, தமிழகத்தில் உள்ள மகளிர் விடுதிகளை அரசே ஏற்று நடத்த வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் நடந்த கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இளம்பெண்கள் கருத்தரங்கம் கோவை தாமஸ்கிளப்பில் நடைபெற்றது. இதில், 'அச்சம் தவிர் ஆற்றல் பெருக்கு' என்கிற தலைப்பில் மாதர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் என்.அமிர்தமும், 'நிகரெனகொள் நிமிர்ந்து நில்' என்கிற தலைப்பில் செ.சுந்தரவள்ளியும், 'சட்டம் நம் கையில்' என்ற தலைப்பில் வழக்கறிஞர் கீதா ராஜேந்திரன் ஆகியோரும் கருத்துரையாற்றினர்.

முன்னதாக, இந்தக் கருத்தரங்கில் பெண்கள் பாதுகாப்பு உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதாவது, பணியிடங்களில் பாலியல் புகார் கமிட்டி அமைக்கப்பட வேண்டும் என்பதை அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் மீது நடைபெறும் குற்றங்களை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளியூரில் இருந்து கோவை மாநகரில் கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வதற்காக வருபவர்கள் தனியார் விடுதிகளில் தங்கியுள்ளனர். இங்கு பலநேரங்களில் பாதுகாப்பு குறைபாடுகளும், பெண்களுக்கான அச்சுறுத்தல்களும் நிகழ்கின்றன. எனவே, தமிழக அரசு பெண்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மகளிர் விடுதிகளைக் குறைந்த கட்டணத்தில் அரசே அமைத்துக் கொடுக்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் இளம்பெண்கள் அமைப்பின் பிரிவிற்கு டி.பிரியா கண்வீனராக தேர்வு செய்யப்பட்டார். இந்த நிகழ்ச்சியில், மாதர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.ராதிகா, தலைவர் எஸ்.அமுதா, பொருளாளர் ஜோதிமணி, மாநிலக்குழு உறுப்பினர் ராஜலட்சுமி உள்ளிட்ட ஏராளமான இளம்பெண்கள் பங்கேற்றனர்a