நீலகிரி : வன உயிரின வார விழாவினை முன்னிட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சிகளின் கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கின
நீலகிரி : வன உயிரின வார விழாவினை முன்னிட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு வண்ணத்துப்பூச்சிகளின் கணக்கெடுப்பு பணிகள் நேற்று முதல் தொடங்கின.
நீலகிரி உயிர்ச்சூழல் மண்டலத்தில் பல்வேறு வகையான அரிய விலங்குகள், பறவைகள் மற்றும் தாவரங்கள் உள்ளன. நீலகிரியை மட்டுமே வாழ்விடமாக கொண்ட தவளை இனங்கள், பூச்சியினங்கள், அரிய வகை வண்டுகள், வண்ணத்துப்பூச்சிகள் அதிகளவில் காணப்படுகின்றன. இதனிடையே, வனங்களின் ஆரோக்கியத்தை பறைசாற்றும் குறியீடாக விளங்கக் கூடிய 300 வகையான வண்ணத்துப்பூச்சி இனங்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ளதாக கணக்கெடுப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், வன உயிரின வார விழாவினை முன்னிட்டு 30 ஆண்டுகளுக்குப் பிறகு நீலகிரி மாவட்ட வனத்துறை மற்றும் தனியார் அமைப்பு ஆகியவை சார்பில் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் நேற்று துவங்கின. நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் தலைமை வகித்து கணக்கெடுப்பு பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக, இதில், பங்கேற்ற தன்னார்வலர்கள், மாணவ, மாணவியர்களுக்கான பயிற்சி முகாம் உதகை கேர்ன்ஹில் வனத்தில் நடந்தது.
இது தொடர்பாக நீலகிரி கோட்ட மாவட்ட வன அலுவலர் சுமேஷ் சோமன் கூறியதாவது :- வன உயிரின வார விழாவின் ஒருபகுதியாக நீலகிரி மாவட்டத்தில் முழுமையான வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 15 இடங்களில் 50-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் இப்பணிகளில் ஈடுபட உள்ளனர். தமிழகம், கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தன்னார்வலர்கள் பங்கேற்றுள்ளனர்.
கணக்கெடுப்பு முடிவில் இதுதொடர்பாக புத்தகமும் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 30 ஆண்டுகளுக்கு முன்பு தான் வண்ணத்துப்பூச்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. அதன்பின்னர் தற்போது தான் நடத்தப்படுகிறது. இக்கணக்கெடுப்பின் மூலம் தட்பவெப்ப நிலை, வன வளம், அவற்றின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதா என்பது போன்ற விவரங்களை அறிந்து கொள்ள முடியும். நேற்று தொடங்கிய கணக்கெடுப்புப் பணிகள் வரும் 14-ம் தேதி வரை நடக்க உள்ளது, என்றார்.
உதகை அரசு கலை கல்லூரி வன விலங்கு உயிரியல்துறை உதவி பேராசிரியர் ராமகிருஷ்ணன் பேசியதாவது :- காலநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவை உலக அளவில் மிகப்பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. இதுபோன்ற இடர்பாடுகளை உடனுக்குடன் காட்ட கூடிய கருவியாக வண்ணத்துப்பூச்சி உள்ளது. 4 நிலைகளில் நன்று வளர்ச்சியடைந்த வண்ணத்துப்பூச்சி உருவாகிறது. அவ்வாறு உருவாக மரங்கள், தாவரங்களைச் சார்ந்து இருக்கிறது. அதிக வண்ணத்துப்பூச்சி உருவாகும் போது வனப்பகுதிகள் செழுமையாக உள்ளது என்று அர்த்தம். வனவளம் காரணமாக மழை பொழிவு சீராக இருக்கும். மாயார், பவானி போன்ற ஆறுகள் வற்றாமல் ஒடுவதற்கு காரணம் வன வளம் தான். இதனால் சூழலியல் சங்கிலியில் வண்ணத்துப்பூச்சி முக்கிய இடம் வகிக்கிறது.
நீலகிரி மாவட்டத்தைப் பொறுத்தவரை பர்லியார், கல்லாறு, மரப்பாலம் உள்ளிட்ட பகுதிகளில் வண்ணத்துப்பூச்சிகள் அதிகம் உள்ளன. மழை பொழிவு முந்தைய பிப்ரவரி மாதத்திலும், வடகிழக்கு பருவமழைக்கு முன்பு அக்டோபர் மாதத்திலும் வண்ணத்துப்பூச்சி இடப்பெயர்ச்சி ஆகின்றன, இவ்வாறு கூறினார்