கோவை : கோவைப்புதூர் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த முதியவரை சரமாரியாக கத்தியால் குத்திக் கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.

கோவைப்புதூரைச் சேர்ந்தவர் ஜமில் அகமது (75). இவர் இன்று மதியம் தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த மர்ம நபர் முதியவரை திடீரென சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். மொத்தம் 14 குத்துகள் குத்தியதில் முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொலை நடந்த பகுதியில் இருந்த சி.சி.டி.வி. கேமராவை ஆய்வு செய்ததில், கரும்புக்கடையை சேர்ந்த பூங்காநகரில் வசித்து வரும் யாக்கோப்பின் மகன் ரிஸ்வான் (34) தான் இந்தக் கொலையை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.