கோவை : கோவைப்புதூரில் முதியவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
கோவை : கோவைப்புதூரில் முதியவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்த நபரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கோவைப்புதூரைச் சேர்ந்தவர் ஜமில் அகமது (75). இவர் இன்று மதியம் தனது வீட்டின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்கே வந்த மர்ம நபர் முதியவரை திடீரென சரமாரியாக கத்தியால் குத்தியுள்ளார். மொத்தம் 14 குத்துகள் குத்தியதில் முதியவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். பின்னர், தகவல் அறிந்து வந்த போலீசார் பிரேதத்தைக் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக குனியமுத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறு காரணமாக முதியவரை கொலை செய்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.