தரமற்ற அரசுப் பேருந்துகள் : வீடியோ மூலம் புகார் தெரிவித்த பேருந்து ஓட்டுநரின் சஸ்பெண்ட் ரத்து

அரசுப் பேருந்தின் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீதான ஆணை ரத்து செய்யப்பட்டது.

அரசுப் பேருந்தின் அவலநிலை குறித்து சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அரசு பேருந்து ஓட்டுநர் மீதான ஆணை ரத்து செய்யப்பட்டது. 

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பழனி கிளையில் ஓட்டுனரான விஜயகுமார், பழனி - திருச்சி பேருந்தை இயக்கி வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையில் பேருந்து முழுவதும் தண்ணீர் ஒழுகி வருவதாகவும், பிரேக், முகப்பு விளக்கு ஆகியவை சரிவர செயல்படவில்லை என்றும், இதனால் பேருந்தை இயக்க முடியவில்லை என வீடியோ மூலம் புகார் தெரிவித்திருந்தார். மேலும், இதுகுறித்து கிளை மேலாளரிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்றும் அவர் கூறியிருந்தார்.

விஜயகுமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவிய நிலையில், அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியானது. விஜயகுமாரின் இந்த நடவடிக்கைக்கு பலரும் பாராட்டு தெரிவித்த நிலையில், பராமரிப்பின்றி உள்ள அரசுப் பேருந்துகளை முறையாகப் பராமரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல பணிக்குச் சென்ற விஜயகுமாரை, தற்காலிக பணிநீக்கம் செய்துள்ளதாகக் கூறி, அதற்கான உத்தரவை பழனி அரசு போக்குவரத்துக் கழக கிளை மேலாளர் வழங்கியுள்ளார்.

அதில் பணியின்போது இருக்கையில் அமர்ந்து, பேருந்தை இயக்கிக் கொண்டே அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும்படி வாட்சாப்பில் செய்தியாக பேட்டி கொடுத்ததால் தற்காலிக பணி நீக்கம் செய்பட்டதாக ஆணையில் கிளை மேலாளர் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர் விஜகுமார், தவறு செய்யாத தன் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கையை ரத்து செய்து மீண்டும் பணி வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார்.

கிளை மேலாளரின் இந்த செயலுக்கு சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில், விஜயகுமாருக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சமூக ஆர்வலர்களும் ஓட்டுநரின் சஸ்பெண்டு உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்று வலியுறுத்தினர். அதன்படி, ஓட்டுநர் விஜயகுமார் சஸ்பெண்டு உத்தரவு இன்று ரத்து செய்யப்பட்டது. இதற்கான உத்தரவை பழனி அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் பிறப்பித்துள்ளார். 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...