திருப்பூரில் வரும் 13-ம் தேதி பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம்

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 13-ம் தேதி நடக்கிறது.

திருப்பூர் : திருப்பூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் வரும் 13-ம் தேதி நடக்கிறது. 

வரும் சனிக்கிழமை (13-ம் தேதி) அன்று காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை அனைத்து வட்டங்களிலும் உள்ள கிராமங்களில் இந்த குறைதீர்க்கும் நாள் முகாம் நடைபெற உள்ளது. இம்முகாமில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து குடிமைப்பொருள் தனி வட்டாட்சியர்கள், வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் தனி வருவாய் ஆய்வாளர்கள் கலந்து கொண்டு, முகாமில் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு செய்ய உள்ளனர். 

அவினாசி (ஈட்டிவீரம்பாளையம்), திருப்பூர் வடக்கு (கணக்கம்பாளையம்), திருப்பூர் தெற்கு (நல்லூர்), ஊத்துக்குளி (விருமாண்டம்பாளையம்), பல்லடம் (கணபதிபாளையம்), உடுமலைப்பேட்டை (பள்ளபாளையம்), மடத்துக்குளம் (சர்க்கார்கண்ணாடி புதூர்), தாராபுரம் (தளவாய்பட்டினம்), காங்கேயம் (வெள்ளகோவில்) ஆகிய வட்டங்களின் கிராமங்களில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் பொது விநியோகத்திட்ட சிறப்பு குறைதீர்க்கும் நாள் முகாம் நடக்கிறது.

கிராம பொதுமக்கள் புதிய மின்னணு குடும்ப அட்டைகளுக்கான மனுக்களை வழங்கவும், மின்னணு குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், பெயர் திருத்தம் போன்ற மின்னணு குடும்ப அட்டை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளவும் இந்த முகாமினை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...