காவல் நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை காணச்சென்ற வைகோ-வும் கைது

கோவை: சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

கோவை: சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள நக்கீரன் கோபாலை சந்திக்க காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் தர்ணாவில் ஈடுபட்ட வைகோ கைது செய்யப்பட்டார்.

மூத்த பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபாலை சென்னை விமான நிலையத்தில் வைத்து இன்று காலை போலீசார் கைது செய்தனர். ஆளுநர் பணியில் தலையிட்டதாகவும், மக்களிடையே வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும் விதமாக பேசியதாகவும் ஆளுநர் மாளிகை தரப்பு அளித்த புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட அவர் சிந்தாதிரிப்பேட்டை தற்போது காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார். இதையறிந்த ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, நக்கீரன் கோபாலை காண அந்த காவல் நிலையத்திற்கு சென்றார்.

ஆனால், அவரை போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. உடனே வக்கீல் என்ற முறையில் தன்னை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்று வைகோ போலீசாரிடம் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அவரது கோரிக்கையை போலீசார் நிராகரித்தனர். நக்கீரன் கோபாலிடம் விசாரணை நடந்து வருவதால் தற்போது அனுமதிக்க இயலாது என்று தெரிவித்தனர்.

இதனால் ஆவேசமடைந்த வைகோ, போலீஸ் உயர் அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். என்றாலும் போலீசார் அவரை அனுமதிக்கவில்லை.

இதனால் மேலும் ஆவேசமடைந்த வைகோ காவல் நிலையம் முன்பு தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.போலீஸ் அதிகாரிகள் அவரை சமரசம் செய்ய முயன்றனர். எழுந்து செல்லுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் வைகோ அதை ஏற்கவில்லை.

இதைத் தொடர்ந்து 11.30 மணியளவில் வைகோ-வை கைது செய்வதாக போலீசார் அறிவித்தனர். அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் வேனில் ஏற்றி அழைத்துச் செல்லப்பட்டார். நக்கீரன் கோபால் கைதைக் கண்டித்து பத்திரிகையாளர்களும் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

Newsletter

நீண்டநாள் கோரிக்கைகள்: அமைச்சரிடம் மனு அளித்த டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு

பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட நீண்டநாள் கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர்...

கோவை பீளமேடு பகுதிகளில் பல்வேறு தூய்மைப் பணிகள், கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி, வார்டு எண் 27 பீளமேடு பகுதியில் கவுன்சிலர் அம்பிகா தனபால் தலைமையில் குப்பை அகற்றும் பணிகள் மேற்கொள...

கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் மாநகராட்சி ஆணையாளர் நேரடி ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி மேற்கு மண்டல வார்டு எண்.33ல் உள்ள கவுண்டம்பாளையம் மேல்நிலை நீர்த்தேக்கத்தில் ஆணையர் மா.சிவகுரு...

Black Ribbons, Walkout: Farmers Allege CM Failed to Keep Poll Promise on Crop Loan Waiver

Members of the Tamil Nadu Vivasaayigal Paadhukaapu Amaippu attended the farmers’ grievance redressal meeting in Tiruppur...

பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்யக் கோரி கருப்புத் துணி கட்டி விவசாயிகள் வெளிநடப்பு

தேர்தல் வாக்குறுதியாக அறிவித்தபடி பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூரில் நடைபெற்ற...

மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி மூன்று மத குருமார்களுடன் எம்எல்ஏ அலுவலகத்தை திறந்த அமைச்சர் சம்பத்குமார்

கோவை வடக்கு தொகுதி எம்எல்ஏ அலுவலகத்தை அமைச்சர் சம்பத்குமார் இந்து, இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மத குருமார்களின் முன்னிலையில...