கோவை: கோவையில் குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கணவன் தொலைக்காட்சி பெட்டியை போட்டு உடைத்ததில் சிகிச்சை பெற்று வந்த மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோவைப்புதூர் கருப்பண்ணன் வீதியில் வசிப்பவர் சேகர் (32). இவர் கோவைபுதூர் பிரிவில் ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த சுகன்யா என்பவரை காதலித்து கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 6 மற்றும் 7 வயதில் இரு குழந்தைகள் உள்ளனர்.
இதனிடையே கணவன் மனைவிக்கு இடையே கடந்த சில நாட்களாக அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் 23 -ஆம் தேதி தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சேகர் அங்கிருந்த டி.வி-யை எடுத்து சுகன்யாவின் தலையில் போட்டார். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.
அப்போது அங்கிருந்தவர்கள் சுகன்யாவை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்த செல்வபுரம் போலீசார் சேகரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த சுகன்யா நேற்று இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி செல்வபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.