கோவை : அக்குபஞ்சர் நிபுணரிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை மற்றும் ரொக்கத்தை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

குனியமுத்தூர் மேற்கு பகுதியைச் சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (37). அக்குபஞ்சர் நிபுணரான இவர் அதே பகுதியில் கிளினிக் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில், சிகிச்சைக்கு வந்தது போல 3 இளைஞர்கள் சில தினங்களுக்கு முன்பு இவரது கிளினிக்கிற்கு வந்துள்ளனர்.
அங்கு ஷேக் அப்துல்லாவிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 25,000 ரொக்கம் மற்றும் 13 சவரன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்றுள்ளனர். இதுகுறித்து குனியமுத்தூர் காவல் நிலையத்தில் ஷேக் அப்துல்லா புகார் அளித்தார்.
இது தொடர்பாக கோவை மாநகர காவல் ஆணையர் பெரியய்யாவின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் லட்சுமியின் மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஈரோடு மாவட்டம் பவானியைச் சேர்ந்த கார்த்திக் (23), சத்தியமங்கலம் தொப்பம்பட்டி சேர்ந்த கருப்பசாமி (23), ராஜ்குமார் (26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 7 சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், இவர்களுக்கு பல்வேறு கொள்ளை சம்பவங்களில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.