கோவை : நொய்யல் ஆற்றுப்படுகையை மீட்டெடுப்பது உள்ளிட்ட பல்வேறு நோக்கத்திற்காக நபார்டு மற்றும் ஜி.ஐ.இசட் ஆகியவை இணைந்து 3 நாள் பயிற்சி பட்டறையை நடத்தின.

நபார்டு மற்றும் ஜி.ஐ.இசட் மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கியாளர்கள் நிறுவனம் இணைந்து நடத்திய இந்தப் பயிற்சிப் பட்டறையானது, கடந்த 26-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை நடைபெற்றது. இதில், பொதுத்துறை, நீர்வளத்துறை, வனத்துறை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண் துறை மற்றும் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் கரூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் கலந்து கொண்டன. கோவையின் சார்பில் சிறுதுளி அமைப்பு கலந்துகொண்டது. இதில், பசுமை கால நிதியம் மற்றும் நொய்யல் ஆற்றுப்படுகையை மீட்டெடுப்பது குறித்து விளக்கப்பட்டது.