ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலை தலா ரூ. 2 குறைப்பு : நாளை முதல் அமல்

ஆந்திரா: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திராவில் தலா ரூ. 2 விலை குறைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

ஆந்திரா: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திராவில் தலா ரூ. 2 விலை குறைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது. 

கச்சா எண்ணெய் உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் சரிவு போன்ற காரணங்களை காட்டி வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்த விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது. 

இதனிடையே, ராஜஸ்தான் மாநில பா.ஜ.க., அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான வாட்வரியை குறைத்தது. இதனால் அங்கு பிற மாநிலங்களைக் காட்டிலும் ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மகாராஷ்டிர மாநில அரசும் கவனத்தில் கொள்வதாக தெரிவித்தது. 

இந்த நிலையில், தெலுங்குதேசம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ. 2 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். 

Newsletter

Recurring Traffic Delays: Passengers Urge Regulation of Political Welcome Gatherings at Coimbatore Airport

Passengers at Coimbatore Airport have urged authorities to immediately regulate the recurring traffic chaos during polit...

தொடர்கதையாகும் அவதி: கோவை விமான நிலையத்தில் அரசியல் பிரமுகர்கள் வருகையால் பாதிக்கப்படும் பயணிகள்..!

கோவை விமான நிலையத்திற்கு வரும் அரசியல் பிரமுகர்களை வரவேற்க ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் தங்களது வாகனங்களை தாறுமாறாக நி...

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...