ஆந்திரா: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில், ஆந்திராவில் தலா ரூ. 2 விலை குறைக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தில் புதிய விலை நாளை முதல் அமலுக்கு வருகிறது.

கச்சா எண்ணெய் உயர்வு, டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பில் சரிவு போன்ற காரணங்களை காட்டி வரலாறு காணாத வகையில் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன. இந்த விலை உயர்வை கண்டித்து காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் முழு அடைப்பு போராட்டம் இன்று நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. தெலுங்கானா மற்றும் ஆந்திரபிரதேசம் மாநிலங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
இதனிடையே, ராஜஸ்தான் மாநில பா.ஜ.க., அரசு பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீதான வாட்வரியை குறைத்தது. இதனால் அங்கு பிற மாநிலங்களைக் காட்டிலும் ரூ. 2.50 குறைக்கப்பட்டுள்ளது. இதேபோல, மகாராஷ்டிர மாநில அரசும் கவனத்தில் கொள்வதாக தெரிவித்தது.
இந்த நிலையில், தெலுங்குதேசம் ஆட்சி செய்யும் மாநிலத்தில் விலை குறைப்பு தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலையில் தலா ரூ. 2 குறைக்கப்படுகிறது. இந்த விலை குறைப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார்.