கோவை: தி.மு.க பலம்பெற ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும் என்று கோவையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
கோவை: தி.மு.க பலம்பெற ஸ்டாலினும் அழகிரியும் இணைய வேண்டும் என்று கோவையில், மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் தெரிவித்துள்ளார்.
கோவை செல்வபுரம் அடுத்த தெலுங்குபாளையம் பகுதியில் தனியார் விடுதியில் மதுரை ஆதீனம் அருணகிரிநாதர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "குட்கா ஊழலை பொருத்தவரை சி.பி.ஐ மற்றும் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். ஊழல் அமைச்சர்கள் மீது முதலமைச்சர் உரிய நடவடிக்கை எடுப்பார்.
எதிர்க்கட்சி என்ற முறையில் தி.மு.க தன்னுடைய கடமையை ஆற்றி வருகிறது. திமுக பலப்பட வேண்டுமென்றால் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலினும், அழகிரியும் இணைய வேண்டும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முடிவில் பா.ஜ.க.,வும், தமிழகத்தில் அ.தி.மு.க.,வும் நல்ல முறையில் வெற்றி பெறும்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள ஏழு பேரை ஆளுநர் நிச்சயம் விடுதலை செய்ய உத்தரவிடுவார். இதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். நித்தியானந்தா தரப்பிலிருந்து அச்சுறுத்தல் உள்ளது. ஆனால், அவர் மீண்டும் ஆதீனத்தில் நுழைய முடியாது. பெட்ரோல்-டீசல் விலையை ஜி.எஸ்.டி.,க்குள் கொண்டு வந்து 30 ரூபாய்க்குக் கொண்டு வர வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது.
சோபியா விமானத்தில் அப்படி நடந்திருக்கக் கூடாது. அதேசமயம் அந்த பெண் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்திருக்கக் கூடாது. எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல எல்லா நடிகர்களும் வர முடியாது. ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள அமைச்சர்களுக்கு பதிலாக, குற்றச்சாட்டுகள் இல்லாதவர்களை முதலமைச்சர் அமைச்சராக்குவார். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவில்களில் நடைபெறும் ஊழல்களை ஒழிக்க முடியாது." என்றார்.