நீலகிரியில் மேராக்காய்களுக்கு உரிய விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை

நீலகிரி: கோத்தகிரி போன்ற பகுதிகளில் விலையும் மேரக்காய்களுக்கு காய்கறி மண்டிகளில் உரிய விலை கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நீலகிரி: கோத்தகிரி போன்ற பகுதிகளில் விலையும் மேரக்காய்களுக்கு காய்கறி மண்டிகளில் உரிய விலை கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. பசுந்தேயிலை விலை வீழ்ச்சி மற்றும் கொய்மலர் சாகுபடி செய்ய முடியாத இந்தநிலையில், பெரும்பாலான விவசாயிகள் மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.

கோத்தகிரி, நெடுகுளா, கேர்கம்பை, வ.உ.சி.நகர், மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் முதலீட்டில் பந்தலிட்டு மேராக்காய் பயிரிட்டுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக மேராக்காய் கிலோவுக்கு ரூபாய் 18 வரை கிடைத்துவந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மேராக்காய் விவசாயத்தில் ஆர்வம் காட்டிவந்தனர்.



இந்த சூழலில், கடந்த வாரம் மழை பெய்ததின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த மேராக்காய்களை மண்டிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அறுவடையைத் தாமதப்படுத்தி தற்போது அறுவடை செய்து மண்டிகளுக்கு அனுப்பியதால் கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.

இதன் காரணமாக மண்டிகளில் மேராக்காய் கிலோவுக்கு ரூபாய் 4 முதல் 10 வரையிலும், தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து மேராக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், "வெளி மாநிலங்களில் மேராக்காய்க்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த மாதத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக உயரும் என்பதால் மீண்டும் மேராக்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது." என்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...