நீலகிரி: கோத்தகிரி போன்ற பகுதிகளில் விலையும் மேரக்காய்களுக்கு காய்கறி மண்டிகளில் உரிய விலை கிடைக்காமல் வீழ்ச்சியடைந்துள்ளதால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

நீலகிரி மாவட்டத்தில் தேயிலை சாகுபடிக்கு அடுத்தபடியாக காய்கறி விவசாயமே பிரதானமாக உள்ளது. பசுந்தேயிலை விலை வீழ்ச்சி மற்றும் கொய்மலர் சாகுபடி செய்ய முடியாத இந்தநிலையில், பெரும்பாலான விவசாயிகள் மலை தோட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகின்றனர்.
கோத்தகிரி, நெடுகுளா, கேர்கம்பை, வ.உ.சி.நகர், மிளிதேன் உள்ளிட்ட கிராமங்களில் விவசாயிகள் பல லட்சம் ரூபாய் முதலீட்டில் பந்தலிட்டு மேராக்காய் பயிரிட்டுள்ளனர்.
கடந்த சில மாதங்களாக மேராக்காய் கிலோவுக்கு ரூபாய் 18 வரை கிடைத்துவந்தது. இதனால் பெரும்பாலான விவசாயிகள் மேராக்காய் விவசாயத்தில் ஆர்வம் காட்டிவந்தனர்.

இந்த சூழலில், கடந்த வாரம் மழை பெய்ததின் காரணமாக அறுவடைக்கு தயாராக இருந்த மேராக்காய்களை மண்டிக்கு அனுப்ப முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் அறுவடையைத் தாமதப்படுத்தி தற்போது அறுவடை செய்து மண்டிகளுக்கு அனுப்பியதால் கொள்முதல் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது.
இதன் காரணமாக மண்டிகளில் மேராக்காய் கிலோவுக்கு ரூபாய் 4 முதல் 10 வரையிலும், தரத்திற்கு ஏற்ப கொள்முதல் செய்யப்படுகிறது.
இதுகுறித்து மேராக்காய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறுகையில், "வெளி மாநிலங்களில் மேராக்காய்க்கு அதிக வரவேற்பு உள்ளது. இந்த மாதத்தில் காய்கறிகளின் விலை கணிசமாக உயரும் என்பதால் மீண்டும் மேராக்காய் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது." என்றனர்.