தாராபுரம் அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 600-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் சேதம் : விவசாயி கவலை

திருப்பூர் : தாராபுரம் அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 600-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்ததால் விவசாயி கவலையடைந்துள்ளார்.

திருப்பூர் : தாராபுரம் அருகே தென்னந்தோப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 600-க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் எரிந்து சேதமடைந்ததால் விவசாயி கவலையடைந்துள்ளார்.



தாராபுரம் அடுத்த தாழக்கரையில் பாஸ்கர் என்பவர் 16 ஏக்கர் பரப்பளவில் தென்னை மரதோப்பு வைத்து விவசாயம் மேற்கொண்டு வருகிறார். இன்று வழக்கம்போல், காலை மரங்களுக்கு நீர் பாய்ச்சுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொண்ட பிறகு பாஸ்கர் வீடு திரும்பியுள்ளார். அப்போது, அதிக வெப்பம் மற்றும் காற்றின் காரணமாக மரங்கள் ஒன்றொடொன்று உரசி தீ பற்றியுள்ளது. இதில், தோப்பில் இருந்த 900 மரங்களில் 600-க்கும் மேற்பட்ட மரங்களில் தீ பரவி கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. 



இதனைக் கண்ட அப்பகுதியினர் பாஸ்கருக்கும், தீயணைப்பு துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இருப்பினும், இந்த தீ விபத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான தென்னை மரங்கள், சொட்டு நீர் பாய்ச்சும் குழாய்கள் முற்றிலும் சேதமடைந்தன. இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த தாராபுரம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...