கோவையில் உயர்மின் அழுத்த கம்பியை பிடித்த கல்லூரி மாணவர் மரணம்

கோவை : கோவை மத்திய ரயில்நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை : கோவை மத்திய ரயில்நிலையம் அருகே கண்டெய்னர் லாரி மீது ஏறி உயர்மின் அழுத்தக் கம்பியை பிடித்த கல்லூரி மாணவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்தார். 

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஹரி. கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் டி.சி.ஏ., முதலாம் ஆண்டு பயின்று வந்தார். பீளமேடு பகுதியில் தனியார் விடுதியில் நண்பர்களுடன் அறை எடுத்து தங்கி படித்து வந்த ஸ்ரீஹரி. நேற்றிரவு நண்பர்களுடன் வெளியே சென்றிருந்தார். அப்போது, இன்று அதிகாலை 3 மணியளவில் பீளமேடு ரயில்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னரின் மேல் ஏறியுள்ளார். 

இதனைக் கண்ட அவரது நண்பர்கள் அவரை கீழிறங்குமாறு வற்புறுத்தியும், அதனை அலட்சியப்படுத்திய ஸ்ரீஹரி 10,000 வோல்ட் உயர்மின் அழுத்த கம்பியை பிடித்துள்ளார். இதனால், உயர்அழுத்த மின்சாரம் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே தூக்கி எறியப்பட்டு மரணமடைந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள், இது குறித்த ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Newsletter

பிலாஸ்பூா் - போத்தனூா் இடையே ஒருவழி சிறப்பு ரயில் சேவை

சத்தீஸ்கா் மாநிலம் பிலாஸ்பூரில் இருந்து போத்தனூா் வரை ஒருவழி சிறப்பு ரயில் சேவை மே 28 இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மே 31...

கோவையின் பெருமை “ஸ்ரீ அன்னபூர்ணா” – ஈரோடு குமாரபாளையத்தில் 23-வது கிளை திறப்பு

கோவையின் பிரபல உணவக நிறுவனமான “ஸ்ரீ அன்னபூர்ணா” இன்று தனது 23-வது கிளையை ஈரோடு மாவட்டம் குமாரபாளையத்தில் திறந்து வைத்தது...

கோவை டாஸ்மாக் வேலைநிறுத்தம்: FL-2 பார்களில் கட்டுக்கடங்காத கூட்டம்

கோவையில் டாஸ்மாக் ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டு 215 கடைகளை மூடப்பட்டதால், தனி...

கோவை கரும்புக்கடையில் 5,000 பேர் கலந்துகொண்ட பக்ரீத் சிறப்பு தொழுகை

கோவை கரும்புக்கடை இஸ்லாமிய பள்ளியில் நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 5,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, மக்கள் நலன்,...

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்களின் காலவரையற்ற போராட்டம் வாபஸ்; நாளை முதல் கடைகள் திறப்பு

திருப்பூரில் டாஸ்மாக் ஊழியர்கள் முன்னெடுத்திருந்த காலவரையற்ற கடையடைப்பு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. நாளை முதல் மாவட்டத்...

கோவை அரசு பள்ளிகளில் அடிப்படை வசதிகள் மேம்படுத்த கோரி இந்து இளைஞர் முன்னணி மனு

கோவையில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வித் தரத்தை மேம்படுத்த வேண்டும் என வலியுறுத்தி இந்...